India
மசூதிக்குள் நுழைந்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷமிடக் கோரி இமாமை தாக்கிய கும்பல்.. மராட்டியத்தில் அதிர்ச்சி !
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அன்வா கிராமத்தில் மசூதி ஒன்று இருக்கிறது. இந்த மசூதியில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று மசூதியின் இமாம் தொழுகை நடத்திக்கொண்டிருந்தபோது முகத்தை துணியால் மறைந்த சிலர் மசூதிக்குள் நுழைந்து தொழுகையில் இருந்த இமாமை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால், இமாம் அவ்வாறு கோஷமிட மறுத்த நிலையில்,அவரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் அந்த இமாமின் தாடியையும் வெட்டியுள்ளது. அதன்பின்னர் அங்கு வந்தவர்கள் அந்த இமாமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இது குறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு வந்த போலிஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!