India
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்.. மன உளைச்சலில் இருந்த பெற்றோர் எடுத்த விபரீத முடிவு: ஐதரபாத்தில் அதிர்ச்சி
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு சதீஷ் - வேதா தம்பதியும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிஷிகேத் என்ற 9 வயது மகனும், நிஹால் என்ற 5 வயது மகனும் உள்ளனர்.
இந்த இரண்டு மகன்களுக்கும் மூளை வளர்ச்சி பிரச்னை இருந்துள்ளது. மேலும் இவர்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்னைகள் இருந்துள்ளதால் அவர்களை பல மருத்துவமனைகளில் சதீஷ், வேதா காண்பித்துள்ளனர். அப்போதும் அவர்களுக்கு சரியாகவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர் தம்பதியினர். அதோடு அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் எல்லாரும் அவர்களிடம் இதுகுறித்தும் பேசி வந்துள்ளனர். இதனால் மேலும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதால் பெற்றோர் தற்கொலை செய்ய எண்ணியுள்ளனர். ஆனால் குழந்தைகள் என்ன செய்யும் என்பதால், அவர்களுக்கும் விஷத்தை கொடுத்து கொலை செய்துவிட்டு, தம்பதியும் விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொன்டுள்ளனர். இதையடுத்து சம்பவம் நடந்த மறுநாள் வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர்.
அப்போதும் திறக்கப்படாததால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 4 பேரும் சடலங்களாக வாயில் நுரையோடு கீழே சரிந்து கிடந்துள்ளனர். இதையடுத்து அவர்களது உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
பின்னர் தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தைகள் மன வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதால்தான் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்தது. குழந்தைகளுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருப்பதால் அவர்களையும் கொன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!