India
வேலைக்கு சென்றிருந்த கணவர்.. காதலனுடன் ரொமான்ஸ் செய்த மனைவி.. காட்டிக்கொடுத்த GPS.. அடுத்தது என்ன ?
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தம்பதி வசித்து வருகின்றனர். கடந்த 2014-ல் திருமணமான இந்த ஜோடிக்கு தற்போது 6 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால், அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளார். மேலும் அடிக்கடி அவருக்கு இரவு நேர பணி இருக்கும்.
எனவே இவர் கடந்த 2020-ம் ஆண்டு GPS வசதி கொண்ட கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த GPS இவரது மொபைலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரை இவர் மட்டுமல்லாமல் இவரது மனைவியும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சூழலில் ஒரு நாள் இரவு நேரத்தில் இவர் அவரது நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது இவரது வீட்டில் இருந்த கார் நள்ளிரவு நேரத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனை அவர் தனது மொபைலில் உள்ள ஜிபிஎஸ் மூலம் அறிந்துகொண்டார். மேலும் அந்த கார் அன்று இரவு நேரத்தில் அங்கிருந்த ஏர்போர்ட்டுக்கு சென்றதோடு, அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளது.
இவை அனைத்தும் கணவர் தனது மொபைல் போன் மூலம் அறிந்துகொண்டார். பின்னர் அன்று காலை வீட்டி ல் வந்து கேட்கும்போது மனைவி தான் எங்கும் செல்லவில்லை என்று கூறியதாக தெரிகிறது. எனவே இவர் கார் சென்ற ஹோட்டலுக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அவரது மனைவியும், வேறொரு ஆணும், தங்கள் ஓட்டர் ஐடியை காண்பித்து ஒரு அறை எடுத்து இரவு முழுவதும் தங்கியுள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மீண்டும் கணவர், தனது மனைவியிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். எனவே அவர் தன்னிடம் உள்ள ஜிபிஎஸ் ஆதாரங்களையும், ஹோட்டல் ஊழியர் சொன்னதையும் சொல்லி விசாரித்தபோது, மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் மனைவியும், அவரது ஆண் நண்பரும் சேர்ந்து கணவரை மிரட்டியதாகி கூறப்படுகிறது.
இதையடுத்து கணவர், தனது மனைவி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, நீதிமன்றத்தையும் நாடினார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரது மனைவி மற்றும் ஆண் நண்பர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மனைவிக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளனர். தற்போது அந்த பெண் அவரது ஆண் நண்பருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!