India
மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்.. பக்கத்து வீட்டுக்காரர்களை குத்தி கொன்ற கணவர்.. மும்பையில் அதிர்வலை !
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் அமைந்துள்ளது கிராண்ட் சாலை. இங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. பலரும் வசிக்கும் இங்கு சேத்தன் கலா என்ற நபர் மனைவி குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் இவருக்கும் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மனைவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த மனைவி, தனது 24 வயது மகன், இரண்டு மகள்களை கூட்டிக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் சேத்தன் தனியாக இருந்து வந்துள்ளார். இப்படியே 2 மாதங்களாக தனியே இருந்து வந்த சேத்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டார்.
இதனால் தனியே இருந்து வந்த சேத்தன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்ததற்கு பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள்தான் காரணம் என்று எண்ணிய சேத்தன், அவர்களை கொலை செய்ய எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று மாலை அங்கிருந்தவர்கள் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். இதனை கண்ட சேத்தனுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாலை சுமார் 3.30 மணி அளவில் வீட்டில் இருந்து பெரிய கத்தியை எடுத்து வந்த சேத்தன் 77 வயது முதியவரை குத்தியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் அவர் சரியவே, 70 வயது மூதாட்டியை கத்தியால் குத்தியுள்ளார். இதனை கண்டு கத்திய 18 வயது இளம்பெண்ணையும் கத்தியால் குத்தியதோடு அவரது 53 வயது தாயையும் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மேலும் அங்கிருந்த 10 வயது சிறுவனையும் கொலை செய்ய சென்றபோது, மற்றவர்கள் கத்தி கூச்சலிடவே அந்த சிறுவனை விட்டு அங்கிருந்து ஓடி விட்டார் சேத்தன். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள் சடலங்கள மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் அங்கிருந்து ஓடிய செத்தனை விரைந்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனைவியும் பிள்ளைகளும் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் காரணம் என்று கூறி, அவர்களை கொடூரமாக கொலை செய்துள்ள நபரின் செயல் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!