India

ஸ்ட்ரெச்சர் இல்லாததால் போர்வையால் இழுத்துச்செல்லப்படும் முதியவர்.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலநிலை !

தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற பாஜக வாடை படாத மாநிலங்கள் தனிநபர் வருமானம், தொழில்வளர்ச்சி, சுகாதாரம் என அனைத்து துறையிலும் நாட்டிலேயே முன்னிலையில் இருக்க பாஜக ஆளும் மாநிலங்களோ நாட்டில் பின்தங்கிய மாநிலங்களாக இருந்து வருகிறது.

உண்மை நிலை இப்படி இருக்க பாஜகவோ பாஜக வந்தால்தான் மாநிலங்கள் முன்னேறும் என பொய்ப்பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. ஆனால், சமூகவலைத்தளங்கள் பெருகியுள்ள இந்த காலத்தில் பாஜக ஆளும் மாநிலங்களின் அவலங்களை தோலுரித்து காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது மற்றுமொரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஜெயரோக்யா அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. 1,000 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை மாவட்டத்திலேயே பெரிய மருத்துவமனை என்று கூறப்படுகிறது. ஆனால் 1000 படுக்கைகள் உள்ள இந்த மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட வசதிகள் இல்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில், தற்போது ஸ்ரீகிஷன் ஓஜா (65) என்ற முதியவர் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து நடக்க முடியாத நிலையில், இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார். அங்கு எலும்பியல் துறையின் மருத்துவர்கள் அவரை விபத்து காய பிரிவுக்கு கொண்டுசெல்லுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் அந்த முதியவரை அங்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாத நிலையில், அவரோடு அந்த அவரின் மருமகள் ஒரு பெட்ஷீட்டைக் கொண்டு வந்து அவனை மருத்துவமனையின் பிரதான கதவுக்கு இழுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை அங்கிருந்தவர்கள் இணையத்தில் பதிவிட்ட நிலையில், அது வைரலானது.

அதில் பதிவிட்ட பலர் பாஜக அரசின் மோசமான நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர். 400 கோடியில் கட்டப்பட்டதாக கூறப்பட்ட இந்த மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் கூட இல்லாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் இதுபோன்ற மருத்துவமனைகளை வைத்துக்கொண்டே தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை பாஜக விமர்சித்து வருகிறதா என அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் கூறி வருகின்றனர்.

Also Read: ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்த இளம் நடிகை: கொலையா? தற்கொலையா?- மரணத்திற்கு முன் போட்ட வீடியோவால் குழப்பம்!