India
"இது எங்கள் நிலம்.. நாங்கள் ஏன் இந்தியில் பேசவேண்டும் ?" - இணையத்தில் வைரலாகும் ஆட்டோ ஓட்டுநரின் பதிலடி !
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்தது.
அதோடு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் குழு பரிந்துரைத்துள்ளது.
இப்படி ஒன்றிய அரசு தொடர்ந்து ஹிந்தியை திணித்துவரும் நிலையில், ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிறமொழி பேசும் மாநிலங்களுக்கு வரும்போது அந்த மாநில மக்களும் ஹிந்தியில் பேசவேண்டும் என்று கூறிவரும் நிலை தற்போது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது பெங்களூரில் நடைபெற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் ஹிந்தி பேசும் சில இளம்பெண்கள் கர்நாடக மாநில தலைநகரான பெங்களுருவுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் அங்குல ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளனர்.
அந்த ஆட்டோ ஓட்டுநர் மாநில மொழியான கன்னடத்தில் பேசிய நிலையில், ஹிந்தியில் பேசுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் "நான் ஏன் ஹிந்தியில் பேசவேண்டும்.. இது கர்நாடகா.. நீங்கள் கன்னடத்தில் பேசுங்கள்.. இது எங்கள் நிலம்.. நாங்கள் ஏன் ஹிந்தியில் பேசவேண்டும்" என்று கூறினார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் கன்னடமே மக்களின் மொழியாக இருக்கும் நிலையில், அங்கு வரும் வட இந்தியர்கள் அதனை புரிந்து நடந்துகொள்ளவேண்டும், அதை விட்டு நீங்கள் ஹிந்தியில் பேச வேண்டும் என்ற கூற அவர்களுக்கு உரிமை இல்லை என்ற ரீதியில் இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!