India
YouTube பார்த்து பிரசவம் பார்த்த 15 வயது சிறுமி.. பிறந்த சிசுவை கொன்ற கொடூரம்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு இன்ஸ்டாகிரம் மூலம் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் நட்பாக மாறி அடிக்கடி இருவரும் தனியாகச் சந்திக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இது குறித்து வீட்டில் சொன்னால் பிரச்சனை ஆகிவிடுமோ என்று பயந்த அவர் பிரசவம் தொடர்பான வீடியோக்களை யூடியூபில் பார்த்து வந்துள்ளார்.
மேலும் மருத்துவமனைக்குச் சென்று பிரசவம் பார்த்தால் தாம் மறைத்த உண்மை வெளியே தெரிந்துவிடும் என்று பயந்து சிறுமி பிரசவம் தொடர்பான வீடியோக்களையும் பார்த்து அதற்கு ஏற்ப தாமே பிரசவம் பார்க்க முடிவெடுத்துள்ளார்.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் யாருக்கும் தெரியாமல் யூடியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது அவருக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
பின்னர் இந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் இருக்க அவரை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு உடலை வீட்டில் மறைத்து வைத்துள்ளார். ஆனால் மகளின் உடல் நிலை மோசமாக இருந்ததைக் கண்ட தாய் அவரிடம் விசாரணை செய்துள்ளார்.
அப்போது நடந்த அனைத்து உண்மைகளையும் கூறி தகறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு அங்கு வந்த போலிஸார் பிறந்த குழந்தை உடலை மீட்டு சிறுமையை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த 15 வயது சிறுமி தனக்குப் பிறந்த குழந்தையைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!