India

கல்லூரி முதல்வரை தீ வைத்து எரித்து கொலைசெய்த ABVP மாணவர்.. நடவடிக்கை எடுக்காத போலிஸ்.. ம.பி.யில் கொடூரம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள சிம்ரோல் என்ற பகுதியில் பி.எம். பார்மஸி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அசுதோஸ் ஸ்ரீவஸ்தவா (வயது 24) என்ற மாணவர் கடந்த படித்து முடித்துள்ளார். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ABVP-யிலும் உறுப்பினராகவும் இருந்துள்ளார்

இதே கல்லூரியில் விமுக்தா சர்மா (வயது 54) என்பவர் கல்லூரி முதல்வராக இருந்துள்ளார். ஸ்ரீவஸ்தவாவுக்கு கல்லூரி சார்பில் சான்றிதழ் வழங்குவதற்கு காலதாமதம் ஆகியுள்ளார். இது குறித்து அவர் கல்லூரி முதல்வர் விமுக்தா சர்மாவிடம் பேசியும் தொடர்ந்து காலதாமதம் ஆகியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீவஸ்தவா கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வர் விமுக்தா சர்மா மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அலறித்துடித்த விமுக்தா சர்மாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஸ்ரீவஸ்தவாவுக்கும் தீ காயம் ஏற்பட்டுள்ளது.

80 சதவீத தீ காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கல்லூரி முதல்வர் விமுக்தா சர்மா சிகிக்சை பலனின்றி அடுத்தநாள் பரிதாபமான உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலிஸார் ஸ்ரீவஸ்தவாவை அதிரடியாக கைது செய்தனர்.

ஸ்ரீவஸ்தவா ஏற்கனவே 7-வது செமெஸ்டரில் பெயிலான நிலையில், உதவிபோராசிரியர் டாக்டர் விஜய் படேல் என்பவரை ஸ்ரீவஸ்தவா கத்தியால் குத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் ஸ்ரீவஸ்தவா கைது செய்து பின்னர் பிணையில் வெளிவந்துள்ளார். மேலும், கல்லூரி முதல்வர் விமுக்தா சர்மாவுக்கு ஸ்ரீவஸ்தவா முன்பே வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்த நிலையில், அது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.

Also Read: தெலுங்கானா: "அம்மா மன்னியுங்கள், என்னால் இந்த சித்திரவதையை தாங்கமுடியவில்லை"-கடிதம் எழுதி மாணவர் தற்கொலை!