India

“ஐதராபாத் பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ABVP படுதோல்வி..” : ஆத்திரத்தில் மாணவர்கள் மீது ABVP தாக்குதல் !

புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் ஏ.பி.வி.பி அமைப்பினர் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஏ.பி.வி.பி அமைப்பினர் மற்றொரு தாக்குதல் சம்பவத்தை நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 19ம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30 க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏபிவிபி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு நாடுமுழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்தது. இதனிடையே ஜே.என்.யூ சம்பவம் அரங்கேறிய அடுத்த ஒரே வாரத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர் சங்க நிர்வாகிகள் மீது இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அடுத்த 5 நாட்களியே தேர்தலில் வெற்றிப் பெற்ற மாணவர் சங்க நிர்வாகிகள் மீது ஏ.பி.வி.பி அமைப்பினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதாகவும், ஏ.பி.வி.பி அமைப்பினர் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மாணவ பேரவை தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் தேர்தலை சீர்குழைக்க ஏ.பி.வி.பி முயன்றதாகவும், ஆனால் தேர்தல் நடைபெற்று மாணவர்கள் மூலம் ஏ.பி.வி.பி தேர்க்கடிக்கவும் பட்டது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஏ.பி.வி.பி அமைப்பினர் இந்துத்வா கட்சி கும்பலின் ஆதரவோடு வெளியாட்களை அழைத்து வந்தும், மது போதையில் மாணவர் சங்க நிர்வாகிகளை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் அளித்தப் புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஜனநாயக அமைப்பினர் ஏ.பி.வி.பி அமைப்பினருக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: JNU தமிழ் மாணவர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் : ABVP-யின் செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம்!