India
கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகள் மகனுடன் வீட்டில் முடங்கிய பெண்.. வெளியே சென்ற கணவருக்கும் அனுமதி மறுப்பு !
2019ம் ஆண்டு முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலகமே இதுவரை காணாத இந்த புதிய தொற்றைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா, சீனா போன்ற பெரிய நாடுகளே திணறின.
பின்னர் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு, முகக்கவசம் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தினர். ஆனால், கொரோனா பரவல் முடிவுக்கு வந்து சுமார் 1 வருடம் ஆடிய நிலையில், தற்போதுவரை கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகள் வீட்டிேலேயே தனது மகனுடன் முடங்கிக் கிடந்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் சுஜன் மாஜி. இவருடைய மனைவி முன்முன் மாஜி. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் உள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா உலகம் முழுக்க பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், பொதுமுடக்கம் காரணமாக இந்த தம்பதி வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்து அனைத்தும் சகஜமாகிய நிலையில் கூட, முன்முன் கொரோனாவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வரமறுத்துள்ளார். கொரோனா முடிந்துவிட்டது வெளியே வா என கணவர் அழைத்தும் வெளிவர மறுத்த அவர் தனது மகனையும் வெளியே அனுப்ப மறுத்துள்ளார்.
அதோடு வேலைக்கு சென்ற கணவரையும் வீட்டுக்குள் விட மறுத்துள்ளார். இதனால் சுஜன் அங்குள்ள தெருவில் வீடு எடுத்து தங்கி வீடியோ கால் மூலம் மட்டுமே மனைவி, மகனுடன் பேசியவந்துள்ள்ளார். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சுஜன் மனைவியின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின்னர் போலிஸார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் மனைவி இருந்த வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், மனைவி கதவை திறக்க மறுத்த நிலையில், அதை உடைத்து உள்ளே சென்று அவருக்கு கவுன்சிலிங் வழங்கி அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!