India
கல்லூரி Principal-ஐ உயிருடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய முன்னாள் மாணவர்.. ஷாக் சம்பவம்: காரணம் என்ன?
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பி.எம் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா.
இவர் வழக்கம்போல் கல்லூரி பணிகளை முடித்து விட்டு நேற்று வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை முன்னாள் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தா என்பவர் வழிமறித்து தடுத்துள்ளார்.
இதையடுத்து கல்லூரி முதல்வருக்கும், முன்னாள் மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் மறைத்து எடுத்து வந்திருந்த பெட்ரோலை கல்லூரி முதல்வர் மீது ஊற்றி தீவைத்துள்ளார்.
பின்னர் கல்லூரி முதல்வர் பற்றி எரிந்த தீயுடன் கல்லூரியை நோக்கி ஓடியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 80% தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் கல்லூரி முதல்வர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேலும் சம்பவத்தின் போது முன்னாள் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தாவுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர் தற்கொலைக்கு முயன்றபோது போலிஸார் அவரை பிடித்து கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல் கல்லூரி முதல்வர் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தா தீ வைத்து கொளுத்தியது தெரியவந்துள்ளது.
மேலும் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் பேராசிரியர் ஒருவரை அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா கத்தியால் குத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இம்மாநிலத்தில் கல்லூரி முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என பேராசிரியர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கல்லூரி முதல்வரை முன்னாள் மாணவர்தீ வைத்து கொளுத்திய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !