India
டெல்லியை அடுத்து அசாமில்.. கணவர் மாமியார் உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் ஒளித்து வைத்த பெண்!
அசாம் மாநிலம், நரேங்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரி டே. இவரது மகன் அமர்ஜோதி டே. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலீடா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவது திருமண வாழ்க்கை நன்றாகச் சென்ற நிலையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தனது கணவர் மற்றும் மாமியார் காணவில்லை என கலீடா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் இருவர் குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் தனது மாமியார் சங்கரி டே பயன்படுத்தி வந்த 5 வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைத் தாய்மாமன் எடுத்துக் கொண்டதாகக் காவல்நிலையத்தில் மற்றொரு புகார் அளித்துள்ளார்.மேலும் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி ரூ.5 லட்சம் வரை பணம் எடுத்ததையும் போலிஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலிஸார் மீண்டும் கலீடாவிடம் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். பிறகு போலிஸார் தீவிரமாக விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
கலீடாவுக்கு தன்ஜீத் தேகா என்ற நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இது பற்றி அறிந்து மருமகளைக் கண்டித்துள்ளார் சங்கரி டே. இதனால், இருவரையும் கொலை செய்ய கலீடா முடிவு செய்துள்ளார். இதன் படி அரூப் தாஸ் என்பவர் உதவியுடன் மாமியாரை முதலில் கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளார்.
பின்னர் தன்ஜீத் உதவியுடன் கணவரைக் கொன்று அவரது உடலையும் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பிறகு இருவரது உடல் பாகங்களையும் பாலித்தீன் பையில் கட்டி கேமகாலயா அருகே உள்ள கவுகி பகுதியின் சாலையோரம் வீசியதாக போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பிறகு போலிஸார் அவர் சொன்ன இடத்திற்குச் சென்று உடல் பாகங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து கலீடா, தன்கீத் தேகா, அரூப் தாஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் டெல்லியில் காதலியைக் கொலை செய்து 35 துண்டுகளாகக் காதலன் வெட்டி சாலையில் வீசிய சம்பவத்தைப்போன்றே இந்த சம்பவமும் நடந்துள்ளது உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!