India
வீல் சேரில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த இளைஞர்.. இணையத்தில் பிரபலமான காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம் !
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள கண்ணிக்கரா என்ற பகுதியை சேர்ந்தவர் பிரணவ். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்து ஒன்றில் சிக்கினார். அதில் இவரது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால், இவரால் எழுந்து நடக்கமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
மேலும் மற்றவர் உதவியின்றி இவரால் எதுவும் செய்ய இயலாது. இந்த சூழலில் இவர் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை செய்துவந்தார். மேலும் அம்மாநில போக்குவரத்துத்துறை மேற்கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்வுகளில் இவரும் கலந்துகொண்டு தேவையான உதவிகளை செய்து வந்தார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு முகநூல் வாயிலாக திருவனந்தபுரத்தை சேர்ந்த சஹானா என்ற இளம்பெண் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து இருவரும் தங்கள் நட்பை வாழ்த்துக்கொள்ள அது காதலாக மாறியது. தொடர்ந்து அந்த பெண் இவரை திருமணம் செய்ய எண்ணியுள்ளார். இதனால் இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை.
எனவே பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த 2020-ம் ஆண்டு பிரணாவை திருமணம் செய்துக்கொண்டார் சஹானா. இதையடுத்து இந்த காதல் ஜோடி சமூக வலைதளம் வாயிலாக மக்களை கவர்ந்தனர். மேலும் இருவரும் சேர்ந்தே விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு விழிப்புணர்வு செய்து வந்தனர்.
எந்த சூழலிலும் இருவரும் பிரிந்ததும் கிடையாது. பிராணாவிற்கு சஹானா எப்போதும் துணையாகவே இருந்து வந்தார். மேலும் நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளியை காதலித்து திருமணம் செய்துகொண்டதால் சஹானாவுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து இருவரும் சமூக வலைதளம் மூலமாக அனைவரையும் கவர்ந்த ஜோடியாக இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரணாவுக்கு திடீரென உடல்நலப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீல் சேரில் இருந்தவாறே இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை கண்டதும் பதறிப்போன அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரணாவ் உயிரிழந்தார். இந்த சம்பவம் சமூக வளைதளவாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரணாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!