India
மோடி தொடங்கிவைத்த 4 நாளில் வந்தே பாரத் ரயிலில் கோளாறு.. கதவுகள் திறக்காததால் பரிதவித்த பயணிகள் !
இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி கடந்த 2019ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் வந்தே பாரத் ரயிலில் நடந்துள்ளர்
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி மும்பை-ஷீரடி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைத்தார். இந்த ரயில் தற்போது தினசரி ஓடிவரும் தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்ச்சையில் சிக்கியுள்ளது.
வந்தே பாரத் ரயிலின் கதவுகள் முழுக்க முழுக்க தானியங்கி செயல்பாடு கொண்டதாக விளங்கும் நிலையில், மும்பை-ஷீரடி ரயில் தானே ரயில்நிலையத்தை அடைந்த நிலையில், பயணிகள் வெளியே செல்ல எழுந்துள்ளனர். ஆனால், அதன் கதவுகள் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் திறக்காமல் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின்னர் பயணிகள் கார்ட் கேபின் வழியாக இறக்கிவிடப்பட்டனர். அதன்பின்னர் ரயிலின் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக தொடங்கப்பட்ட 4 நாட்களிலேயே இந்த வந்தே பாரத் ரயில் 13 நிமிடங்கள் தாமதமாக இலக்கை சென்றடைந்தது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!