India
சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற மாணவி.. மாஸ் காட்டுகிறேன் என இளைஞர் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம் !
பொதுவாக இந்த காலத்தில் அநேகமான ஆண்கள், பைக் ஆர்வலர்களாக இருக்கின்றனர். மேலும் தங்களுக்கு பிடித்தமான விசயங்களில் முதன்மையாக அவர்களுக்கு தங்கள் பைக் தான் இருக்கும். சிலர் பைக்கை ரேஸ்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த கலாச்சாரம் வெளிநாடுகளில் மட்டுமின்றி, இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது.
இளைஞர்கள் இவ்வாறும் பைக் ரேஸில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக காவல்துறைக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்துக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் இளம்பெண்கள் முன்னாள் சீன் போடுவதற்காகவே அதிக வேகமாகவும், வீலிங் போன்றவற்றை செய்வர். இவ்வாறு செய்யும் மாணவர்கள் இதனை தங்கள் இணைய பக்கத்தில் போட்டு மகிழ்வர்.
இருப்பினும் இதுபோன்ற சாகசங்கள் ஒன்று அவருக்கு ஆபத்தாகவோ அல்லது சாலையில் சென்றுகொண்டிருப்பவருக்கு ஆபத்தாகவோ முடிய நேரிடுகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கல்லம்பலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நெளஃபல் (18). கல்லூரி முடித்துள்ள இவர், தற்போது வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பைக் ரேஸ் போன்றவை மீது ஆர்வம் கொண்ட இவர், சாலைகளில் பைக் வைத்து வித்தைகள் காட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
மேலும் அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு லைக்ஸுகளையும் வாங்கி மகிழ்வார். இவ்வாறு இவர் அடிக்கடி செய்வதாக தொடர்ச்சியாக புகார்களும் குவிந்து வருகிறது. இதனால் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுமார் 10-க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றங்களில் அபராதமும் செலுத்தியுள்ளார்.
இருப்பினும் இவரது சேட்டை அதிகமாகவே இருந்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட ரூ.20 ஆயிரம் செலுத்தி தனது பைக்கை காவல் நிலையத்தில் இருந்து மீட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெரிய சிக்கலில் இவர் சிக்கியுள்ளார்.
அதன்படி நேற்று தனது பைக் மூலம் வீலிங் செய்து அந்த பகுதி பள்ளி, கல்லூரி மாணவிகள் வரும்போது அவர்கள் முன்பு கெத்து காட்டியுள்ளார். அப்போது அவர் சற்று தடுமாறியதில், அவரது பைக் எதிரே நடந்து வந்து கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவி மீது மோதியுள்ளது.
இதில் சட்டென்று கீழே விழுந்த மாணவி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மாணவி விழுந்ததை கண்ட அந்த இளைஞன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். இதனை கண்ட அந்த பகுதிவாசிகள் அந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.
தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அந்த இளைஞர் மீது அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நெளஃபலை கைது செய்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் சாலையில் பைக் சாகசம் செய்த இளைஞர் ஒருவர், அங்கு வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது மோதியது சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!