India
10 கிலோ மீட்டர் காருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்ட நபர்.. சுங்கச்சாவடியில் கண்டெடுக்கப்பட்ட உடல்!
டெல்லியில் புத்தாண்டு அன்று ஸ்கூட்டரில் சென்ற இளம் பெண் காரில் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்ட சி.சி.டி.வி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்து ஒருமாதம் ஆகும் நிலையில் இதேபோன்று ஒரு கொடூர நிகழ்வு உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த விரேந்தர் சிங் என்பவர் உத்தர பிரதேசத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நொய்டா அருகே வந்த போது காருக்கு அடியில் ஏதோ சிக்கி இருப்பதை சுங்கச்சாவடியில் இருந்த போலிஸார் கவனித்துள்ளனர்.
பின்னர் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காருக்கு அடியில் சிதைத்த நிலையில் சடலம் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு சடலம் எப்படி காருக்கு அடியில் வந்தது? என்று விரேந்தர் சிங்கிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது கடும் பனி மூட்டம் இருந்தது. எதிரே யார் இருக்கிறார்கள் என்று தெரியாத அளவிற்குப் பனி மூட்டம் இருந்தது. அந்த சாலையில் விபத்தில் சிக்கியவர் உடல் எனது காருக்கு அடியில் சிக்கி இருக்கும்" என கூறியுள்ளார்.
மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரில் உடல் இழுத்து வரப்பட்டதால் இறந்தது யார் என கண்டுபிடிப்பதில் போலிஸாருக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இறந்தது யார்? விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றர்.
டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு செல்லும் சாலையில் தொடர்ச்சியாகவே கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்ட பெரிய விபத்து நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!