India

அபுதாபி TO கோழிக்கோடு.. நடுவானில் பற்றி எரிந்த விமானம்: 184 பயணிகள் நிலை என்ன?

அபுதாபி விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 184 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த விமானம் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இன்ஜினில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதை விமானி உடனே கண்டு பிடித்து முழு அவசர நிலையை அறிவித்து உடனே அபுதாபி விமான நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.

பிறகு விமானத்தை உடனே தரையிறக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மேலும் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்தது பயணிகள் அலறியுள்ளனர்.

இதையடுத்து விமானம் தரையிறங்கிய உடன் அங்கிருந்த பாதுகாப்பு குழுவினர் உடனே பயணிகளை விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர். மேலும் தீயையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதேபோல் காற்றின் திசை மாறுபாடு காரணமாகவே இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்ஜினில் ஏற்பட்ட தீயை உடனே கவனித்து விமானத்தைத் தரையிறக்கியதால் 184 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

அண்மையில் கூட கொல்கத்தாவில் இருந்து லக்னோவிற்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் மீது பறவை மோதியதால் தீ விபத்து ஏற்பட்டு விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 82 நாடுகளில் கைதிகளாக இருக்கும் 8343 இந்தியர்கள்: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்!