India
டெங்குவால் பாதிக்கப்பட்ட சிறுமி: அரிய வகை ரத்தம் கொடுத்து காப்பாற்றிய புதுவை திமுக MLA -குவியும் பாராட்டு
தானத்தில் சிறந்த தானம், அன்னதானம் என்று சொல்வது போக தற்போது இரத்த தானம் பிரதான ஒன்றாக அமைகிறது. ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது என்றால், அவர்களுக்கு முதலில் அவசர தேவையாக அமைவது இரத்தம் தான். சில வகையான இரத்தங்கள் கிடைப்பது அரிதாக அமைகிறது. அதில் பிரதானமான ஒன்று தான் 'ஓ-நெகட்டிவ்'.
இந்த ஓ நெகட்டிவ் வகையான இரத்தம் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. எனவே இந்த வகையான இரத்தம் தேவை படுபவர்களுக்கு ஸ்பாட்டில் பலரும் இரத்த தானம் செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுவையை சேர்ந்த திமுக எம்.எல்.ஏவும் இரத்த தானம் செய்து வருகிறார்.
புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருக்கு 7 வயது பள்ளி செல்லும் மகள் உள்ளார். அவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவருக்கு அவர்களது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்தே காணப்படும்.
அவ்வாறு இந்த சிறுமிக்கும் அவரது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் குறைய தொடங்கியது. இதனால் அவரது உடல்நிலை மோசமாக காணப்பட்டதால் அவருக்கு இரத்தம் ஏற்றி ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் சிறுமியின் இரத்தம் அரிய வகை என்பதால் எளியதாக அதை பெற முடியவில்லை.
இந்த நிலையில் சிறுமிக்கு 'ஓ நெகட்டிவ்' ரத்தம் தேவைப்பட்டது. இதற்காக சிறுமியின் தந்தை பல்வேறு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள ரத்த நன்கொடையாளர்கள் பட்டியலில் இருந்த முதலியார்பேட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்தை தொடர்பு கொண்டனர்.
அவரிடம் சிறுமியின் குடும்பத்தார் சிறுமியின் நிலையை குறித்தும், இரத்தம் தேவை என்பதை குறித்தும் கோரிக்கை விடுத்தனர்.
சிறுமியின் உயிரை காப்பற்ற வேண்டி சட்டமன்ற உறுப்பினர் சம்பத், உடனே தான் செய்துகொண்டிருந்த வேலையையும் கிடப்பில் போட்டுவிட்டு, உடனடியாக சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்து சென்றார் . அங்கே தேவைப்பட்ட சிறுமிக்கு தனது இரத்தத்தை தானமாக வழங்கினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்தின் இந்த மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இவர் 45-வது முறையாக ரத்தம் தானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரிய வகை ரத்தம் தானமாக வழங்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?