India
'போலிஸ் அங்கிள்' .. தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த 8 வயது சிறுவன்: ஷாக் காரணம்!
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்திற்குட்பட்ட காசியா பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஆரியன் மவுரியா. 8 வயது சிறுவனான இவன் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்றுள்ளான்.
இப்போது சிறுவனைப் பார்த்த காவல்துறை அதிகாரி அசுதோஷ் குமார் திவாரி என்பவர் அவனை அழைத்து காவல்நிலையத்திற்கான வந்த காரணம் என்ன என்று கேட்டுள்ளார். அப்போது சிறுவன், தனது தந்தை மீது புகார் கொடுக்க வந்துள்ளேன் என கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சிறுவனின் தந்தை தர்மபிரியா. இவர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சிறுவன் ஆரியன் தனது தந்தை குடிக்காமல் இருக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என கூறியுள்ளார்.
பிறகு போலிஸார் சிறுவனின் தந்தையைக் காவல்நிலையத்திற்கு அழைத்து இனி குடிக்கக் கூடாது என அவரிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டு எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர். பின்னர் மாணவரின் இந்த நல்ல குணத்தைப் பார்த்த அசுதோஷ் குமார் திவாரி சிறுவனின் கல்வி செலவை ஏற்க முன்வந்துள்ளார்.
தனது தந்தை தினமும் குடிப்பதாகக் காவல்நிலையத்தில் 8 வயது சிறுவன் புகார் கொடுக்க வந்த சம்பவம் உத்தர பிரதேச மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!