India
“அள்ளிக்கோ.. அள்ளிக்கோ..” - இந்த 3 மாசத்துக்கு DRESS FREE.. அதிரடி OFFER கொடுத்த மால்.. எங்கு தெரியுமா?
'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்ற வார்த்தைக்கு ஏற்ப நாட்டில் பலரும் பணமில்லாதவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகள் செய்து வருகின்றனர். அடிக்கடி சாப்பாடு வழங்கும் சிலர், அவர்களுக்கு ஆடைகள் வழங்குவது மிகச்சிலரே. அதிலும் மழை, குளிர் காலத்தில் சாலையோரம் இருபவர்கள் குடிசையில் இருபவர்களுக்கு குளிருக்கு இதமாக உடைகள் கிடைப்பதே இல்லை.
இதை அறிந்த ஷாப்பிங் மால் ஒன்று அவர்களுக்கு என்று குளிர்காலத்திற்கு புது வித OFFER ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 'அனோகா மால்' என்ற ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது. இந்த மாலுக்கு வடிக்கையளார்கள் பலரும் வந்து செல்வர். குறிப்பாக இதில் விற்கப்படும் உடைகளுக்கு என்றே தனி கூட்டங்கள் வரும். அவ்வாறு வரும் கூட்டமானது பெரிய பணக்காரர்கள், பிசினஸ் குடும்பங்கள், மருத்துவர்கள் என அடங்குவர்.
இந்த நிலையில் இந்த மாலின் சொந்தக்காரர் தற்போது OFFER ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது பணமில்லாத ஏழை மக்கள் இலவசமாக துணி எடுத்துச்செல்லலாம் என்று அறிவித்துள்ளது. பொதுவாக வட மாநிலங்களில் குளிர் காலம் மிகக்கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே ஏழை மக்களுக்கு இலவசமாக ஆடைகளை வழங்க முடிவு செய்துள்ளது மால்.
அதன்படி குளிர்காலமான டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்களுக்கு அந்த மாலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் வைத்திருக்கும் பழைய துணிகளை நன்கொடையாக பெற்றுக்கொள்கின்றனர்.
மேலும், நன்கொடை வழங்க விரும்புபவர்கள் அவர்கள் வழங்கக்கூடிய பொருட்களை, மாலில் இருக்கும் ஊழியர்கள் நன்றாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்த பிறகே பெற்றுக்கொள்கின்றனர். அதிலும் இந்த நன்கொடை அளிப்பவர்களில் பெரும்பாலும் மருத்துவர்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. குளிர்காலத்தில் போதிய துணிகளே இல்லாத மக்களுக்கு, இந்த மால் கொண்டு வந்துள்ள திட்டம் பெரிதளவு உபயோகமாக உள்ளது.
இதுகுறித்து அந்த மாலை இயக்கும் அகமது ராசா கான் கூறுகையில், "இந்த திட்டமானது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. நன்கொடையாக பணம், சாப்பாடு என அனைவரும் அளிப்பது உண்டு. ஆனால் ஆடை என்பதும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
நமக்கு பழையதாக இருக்கும் ஒரு உடை, ஏழை மக்களுக்கு புதிதாக இருக்கும். இந்த அருமையான திட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் நன்கொடை அளிக்கின்றனர்; விருப்பமுள்ளவர்கள் பெற்று கொள்கின்றனர். இது எங்களால் முடிந்த ஒரு சிறு உதவி. தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு துணிகள் மட்டுமின்றி, சில பொருட்களையும் அவர்கள் வழங்குகின்றனர்.
இந்த திட்டத்தில் கூலித் தொழிலாளர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள் போன்ற எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள். இதற்காக அவர்கள் எந்த பணமும் செலுத்த வேண்டியது இல்லை. கடந்த ஆண்டு மட்டுமே சுமார் 3,000 - 4,000 பேர் தங்களுக்கு தேவையான துணிகள், பொருட்களை இங்கிருந்து கொண்டு சென்று பயனடைந்துள்ளனர்" என்றார்.
ஒரு மனிதனுக்கு வாழ்வதற்கு அத்தியாவசியாக கருதப்படும் விஷயங்களில் உடுக்க உடை என்பது 2-ம் இடத்தில உள்ளது. ஆனால் சாலையோர மக்கள் என பலரும் கிழிந்து போன ஆடைகளையே உடுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் உ.பி-யிலுள்ள மாலின் இந்த அருமையான முயற்சி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!