India
பட்டியலின பள்ளி சிறுமிக்கு திடீர் வயிறு வலி.. மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை.. ஆந்திராவில் அதிர்ச்சி!
ஆந்திர மாநிலம் அன்னமய்யா பகுதியிலுள்ள குருகுல பாடசாலையில் பல்வேறு மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கமாக பள்ளிக்கு சென்ற அந்த சிறுமிக்கு வகுப்பறையில் வயிறு வலி ஏற்பட்டுள்ளது. நேரமாக ஆக வலி கூடவே, அவர் துடிதுடித்துள்ளார். இதனால் அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு சக ஆசிரியர்கள் அழைத்து சென்றனர். அங்கே மருத்துவர்கள் அவருக்கு சோதனை மேற்கொண்டபோது திடீரென மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து அங்குள்ள மருத்துவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனர். மேலும் சிறுமி எவ்வாறு கர்ப்பம் தரித்தார் என்பது குறித்தும், அவர் கர்ப்பமாக இருப்பது ஆசிரியர்களுக்கு எப்படி தெரியாமல் இருந்தது என்பது குறித்தும் அனைவரும் குழம்பி போயுள்ளனர்.
இந்த சம்பவம் குருகுல பாடசாலையின் மோசமான நிலையைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு மிகத் தெளிவாக தெரிவதாகவும் கண்டனம் எழுந்துள்ளன. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் நாட்டில் மட்டுமல்ல உலகளவில் பல நடந்துள்ளது. சமீபத்தில் கூட பறக்கும் விமானத்தில் கழிவறைக்கு சென்ற இளம்பெண் ஒருவர், கையில் குழந்தையோடு வெளியே வந்தார். மேலும் பார்ட்டிக்கு ரெடியாகி கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர், வயிறு வலிப்பதாக கழிவறைக்கு சென்றபோது, அவருக்கும் குழந்தை பிறந்தது.
சிலர் கர்ப்பமாக இருப்பது அவர்களால் அறிய முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆந்திராவில் நடந்த நிகழ்வு குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிறுமியை யாராவது பாலியல் வன்கொடுமை செய்தனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!