India
வீடு புகுந்து பெண் பாலியல் வன்கொடுமை.. நண்பர்கள் மீது புகார்.. பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
மும்பை குர்லா பகுதியில் வசிக்கும் 42 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் நவம்பர் 30-ம் தேதி அதிகாலை தனது வீட்டுக்குள் மூன்று பேர் அத்துமீறி நுழைந்ததாகவும், தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியிருந்தார். மேலும், தன்னை அவர்கள் தாக்கியதோடு பிறப்புறுப்பில் சூடு வைத்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தில் நிலையில், இந்த புகார் தொடர்பாக போலிஸார் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு மேலும் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் இந்த புகாரை மறுத்த நிலையில் போலிஸாருக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது.
இதன் காரணமாக புகார் அளித்த அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது இரண்டு மருத்துவமனைகளில் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் உடம்பில் இருந்த காயங்கள் அவரே ஏற்படுத்தி கொண்டதும் என்பதும் அறிக்கை முடிவுகளில் தெரியவந்தது.
இதன் காரணமாக போலிஸார் அந்த பெண்ணிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் இந்த புகார் போலியானது என்பது தெரியவந்தது. மூவரும் நண்பராக இருந்து தொழில்செய்து வந்த நிலையில் அவர்களுக்குள் வியாபார பிரச்னை ஏற்பட்டதால் அவர்களைப் பழி வாங்கும் நோக்கத்தில் அந்த பெண் இப்படி போலி புகார் அளித்துள்ளது தெரியவந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் கடந்த 40 நாள்களாக சிறையில் இருக்கும் நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பல்வேறு தரப்பினரும் அந்த பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்