India
முதல் இந்திய தயாரிப்பு.. 'TATA INDICA' அறிமுகமாகி 25 வருடங்கள் நிறைவு..கேக் வெட்டி கொண்டாடிய ரத்தன் டாடா!
இந்தியா சுதந்திரம் அடையும் முன்னர் 1945-ம் ஆண்டு கிழக்கிந்திய ரயில்வே நிறுவனத்திடம் இருந்து ரூ.25 லட்சத்துக்கு ஜாம்ஷெட்பூரில் உள்ள ஆலையை டாடா குழுமம் வாங்கியது. இது இந்திய வாகன உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது என்பதை அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதுதான் நடந்தது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் 1954 முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வாகன உற்பத்தியில் இறங்கியது. முதலில் வர்த்தக வாகன உற்பத்தியில் மும்முரமாக இருந்த டாடா மோட்டார்ஸ் பின்னர் பயணிகள் வாகன உற்பத்தியிலும் இறங்கியது.
அதன் தொடர்ச்சியாக 1991-ம் ஆண்டு டாடா சியரா, 1992-ம் ஆண்டு டாடா எஸ்டேட், 1994-ம் ஆண்டு டாடா சுமோ, 1998-ம் ஆண்டு டாடா சபாரி என பல வாகனங்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தாலும் அவை முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக இருக்கவில்லை. இதன் காரணமாக முழுக்க முழுக்க இந்தியாவில் வாகனத்தை தயாரிக்கவேண்டும் என டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு அதற்கான வேலையில் இறங்கியது.
அதன் பயனாக 1998-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் அன்று முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பான டாடா இண்டிகாவை அறிமுகம் செய்தது. ஆரம்பத்தில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சுமார் 1.15 லட்சம் நபர்கள் இந்த காரை வாங்க முன்பதிவு செய்தனர். ஆனால், இந்த கார் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தாலும் அது கொடுத்த அனுபவத்தில் இருந்து தற்போது உலகின் முன்னணி மோட்டார் தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.
முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பான டாடா இண்டிகாவை அறிமுகம் செய்து தற்போது 25 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது அதனை கொண்டாடும் விதமாக ரத்தன் டாடா கேக் வெட்டி கொண்டாடினார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!