India
“சீட்டுக்கட்டு விளையாடலாம்..” -ஆசைவார்த்தை கூறிய நண்பர்: நம்பிய அழகு கலை பெண் நிபுணருக்கு நேர்ந்த கொடூரம்
மகாராஷ்டிர மாநிலம் மும்பை வில்லே பார்லே என்ற பகுதியை சேர்ந்தவர் 49 வயது பெண். இவர் அந்த பகுதியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அழகு கலை நிபுணரான இவர், அந்த பகுதியில் 2 பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். ஆனால் கொரோனா காலத்தில் பெரிதளவு வருமானம் இல்லாததால் தனது தொழிலை தற்போது விட்டுவிட்டார்.
பொழுதுபோக்கிற்காக சீட்டுக்கட்டு விளையாட்டில் அதீத நாட்டமுடைய இவர் அந்த பகுதியிலுள்ள சிலருடன் சேர்ந்து சீட்டுக்கட்டு விளையாடி வருவார். அதுவும் அவரது 25 ஆண்டு கால நெருங்கிய நண்பராக இருக்கும் லால்சாகேப் என்பவருடன் விளையாடி வந்துள்ளார்.
இந்த நிலையில் லால்சாகேப் தன்னுடன் தனது வீட்டிற்கு வரும்படியும், அங்கே உன்னை போல் சீட்டுக்கட்டில் நாட்டமுடைய நண்பர்கள் தனக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார். முதலில் தயங்கிய அந்த பெண், பிறகு நண்பர் அழைத்ததால் அவருடன் சேர்ந்து அகமதாபாத்துக்கு சென்றுள்ளார்.
சென்ற அன்று இரவு, லால்சாகேப் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது அவரது நண்பர்கள் இரண்டு பேரை அழைத்துள்ளார் லால்சாகேப். பிறகு அனைவரும் சேர்ந்து மது அருந்திக்கொண்டே சீட்டு விளையாடியுள்ளனர். அப்போது மது போதை அதிகமானதால் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளனர்.
தொடர்ந்து அந்த பெண் மறுப்பு தெரிவித்த போதிலும், அவரை வலுக்கட்டாயமாக 3 பேர் சேர்ந்துகொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதனை தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாகவும் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், மறுநாள் வீட்டிற்கு சென்று தனது கணவரிடம் நடந்தவற்றை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த கணவர், உடனே மனைவியை கூட்டி கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் குற்றவாளிகள் மீது ஐபிசி 376, 376 (d), (e), 354, 506, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றவாளிகளை தேடினர்.
அதில் இருவரை கைது செய்த அதிகாரிகள், தலைமறைவாக இருக்கும் மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். சீட்டு விளையாட ஆசைகாட்டி நண்பர் அழைத்ததில், நம்பி சென்ற பெண்ணை, தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!