India
சீட்டாட்டத்தின் மீது மோகம்.. கிளப் அமைத்து தருவதாக கூறி பெண் பாலியல் வன்கொடுமை.. மும்பையில் அதிர்ச்சி !
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் நிஷா (வயது 41). இவர் மும்பையின் இரண்டு பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். ஆனால் கொரோனா சூழலில் வியாபாரம் படுத்து விட்ட நிலையில், வேறு வழியின்றி தனது இரண்டு பியூட்டி பார்லரையும் மூடிவிட்டு வேறு தொழில் செய்ய விரும்பியுள்ளார்.
அதன்படி தனக்கு தெரிந்தவரான லால்சந்த் குப்தா என்பவரிடம் இது குறித்து கூறியுள்ளார். அதற்கு தான் தானே மற்றும் நவிமும்பை ஆகிய இரண்டு இடங்களில் நடத்திவரும் சீட்டாட்ட கிளப்பில் பார்ட்னராக சேரும்படி லால்சந்த் கூற சீட்டாட்டத்தில் ஆர்வம் உள்ள நிஷா அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்படி அந்த சீட்டாட்ட கிளப்பில் பார்ட்னராக சேர்ந்து அங்கு தனது பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த சீட்டாட்ட கிளப்பில் முறைகேடு நடப்பதை உணர்ந்த நிஷா தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளார்.
ஆனாலும், நிஷாவை விடாத லால்சந்த் மற்றும் அவருக்கு தெரிந்த இரண்டு பேரை அழைத்த மீண்டும் நிஷாவை சந்தித்து தங்களுக்கு தெரிந்த ஒருவர் அகமதாபாத்தில் இருப்பதாகவும் அவர், சீட்டாட்டத்தில் ரூ.25 லட்சம் முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும் கூறி, நீங்கள் தனியே ஒரு கிளப்பை நடத்தலாம் என ஆசை காட்டியுள்ளனர்.
இதனை நம்பிய நிஷாவும், அகமதாபாத் சென்று அவரை சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.அதன்படி ரிஷா, லால்சந்த் மற்றும் அவருக்கு தெரிந்த இரண்டு பேர் காரில் அகமதாபாத் சென்றுள்ளனர். பின்னர் அங்கு ஒரு வீட்டில் தங்கிய அவர்கள், அங்கு சீட்டாடி, மதுபானமும் அருந்தியுள்ளனர். பின்னர் லால்சந்த் மற்றும் அவருக்கு தெரிந்த இரண்டு பேர் சேர்ந்து நிஷாவை இரவு முழுவதும் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அடுத்த நாள் தனது கணவருடன் சேர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக நிஷா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் இரண்டு பேரை கைது செய்து மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!