India
ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால்? : ஒன்றிய அரசை எச்சரிக்கும் டி.ராஜா!
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவிக்கு வந்ததில் இருந்தே மாநில அரசுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதோடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் ஆளுநர்.
அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார். அண்மையில் கூட தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைப்பதுதான் சரியானது என பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
இதோடு நின்று விடாத ஆளுநர் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையிலிருந்த சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற வார்த்தைகளை வேண்டும் என்றே தவிர்த்து வாதித்தார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. மேலும் ட்விட்டரில் #GetOutRavi, என்ற ஹேஷ்டாக் இப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் GetOutRavi என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ஆளுநருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. . அதேபோல் தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவடியில் உள்ள இந்து கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டு ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, " ஆளுநராக இருக்க ரவி தகுதியற்றவர். அவரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்கிறார்.
தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் அரசியல் குறித்து ஆளுநர் ரவிக்குத் தெரியவில்லை. ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெறாவிட்டால் மக்கள் எழுச்சியைச் சந்திக்க நேரிடும். தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்ப உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!