India
விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த பயணி.. சம்மந்தப்பட்ட நபரை பணிநீக்கம் செய்தது அமெரிக்க நிறுவனம்!
நியூயார்க்கில் இருந்து டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் அருகில் இருந்த சகா பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியானது.
இந்த சம்பவம் தற்போது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம் இது குறுய்த்து காவல்நிலையத்தில் அதிகாரபூர்வமாக புகார் ஒன்றை அளித்தது. அதனைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சி சம்பவம் பொது அரங்கில் வெளியானது.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்பின்னர் இந்த சம்பவத்தின் ஈடுபட்டது சங்கர் மிஸ்ரா என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. மேலும் ஊடகங்களில் அவரின் புகைப்படமும் வெளிவந்தது.
இந்த சம்பவம் வெளியான நிலையில், அவர் தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. ஆனால், அவரின் மொபைல் எண்ணை வைத்து அவர் பெங்களுருவில் இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு பதுங்கி இருந்த சங்கர் மிஸ்ராவை போலிஸார் அதிரடியாக கைது செய்து டெல்லிக்கு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் முன்பு சங்கர் மிஸ்ரா அழைத்து வரப்பட்ட போது அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், அவர் வேலை செய்து வந்த வெல்ஸ் பார்கோ என்ற அமெரிக்க நிறுவனம் அவரை நேற்று வேலையில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்