India
தூங்கி கொண்டிருந்த 2 மாத குழந்தையை தூக்கியெறிந்த குரங்கு கூட்டம்.. உ.பியில் தொடரும் அவலம் !
உத்தர பிரதேச மாநிலம் பண்டா என்ற பகுதியை அடுத்து சபர் என்ற கிராமம் உள்ளது. இங்கு விஷ்வேஷ்வர் ஷர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தற்போது 2 மாதத்தில் கை குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி அந்த குழந்தை வீட்டிலுள்ள தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தது. அப்போது வீட்டு கதவு லேசாக திறந்திருந்தது. இதனை கண்ட குரங்குகள் உடனே வீட்டிற்குள் நுழைந்து தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கி கொண்டு வெளியேறியது.
குரங்கு தூக்கி கொண்டு போகையில் குழந்தை அழுதுள்ளது. அதன் அழுகை சத்தத்தை கேட்டதும், குழந்தையின் குடும்பத்தினர் வந்து பார்த்துள்ளனர். ஆனால் அதற்குள்ளே குரங்கு மேற்கூரை பகுதிக்குச் குழந்தையை கொண்டு சென்றுள்ளது. இதையடுத்து அங்கிருந்து குழந்தையை கீழே வீசி எறிந்துள்ளது.
இதனை கண்டு பதறிப்போன குடும்பத்தினர், உடனே தங்கள் குழந்தையை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குரங்கு வீசியதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அந்தக் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதே உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பரேலியில் என்ற பகுதியில் 5 வயது குழந்தையை தூக்கிச் சென்ற குரங்குகள், அக்குழந்தையின் தோல்களைக் கிழித்து வீசி எறிந்தது. பின்னர் அந்த குழந்தையை குரங்குகளிடமிருந்து காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அதிக ரத்தம் வெளியேறியதில் அந்த குழந்தையும் உயிரிழந்தது.
தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இதே பரேலி பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினரது 4 மாத குழந்தையை மொட்டை மாடியில் இருந்து குரங்கு தூக்கி வீசியதில் , குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரபிரதேசத்திலுள்ள மதுராவில் மாவட்ட ஆட்சிய (COLLECTOR) நவ்நீத் சாஹல் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, குரங்கு ஒன்று அவரது மூக்கு கண்ணாடியை எடுத்து சென்று ஆட்டம் காமித்தது.
தற்போது மீண்டும் 2 மாத குழந்தையை வீட்டிற்குள் வந்து குரங்கு கூட்டம் இழுத்து சென்று தூக்கி எறிந்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வனத்துறையினருக்கு புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது என்பது குறிப்பித்தக்கது.
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!