India
ஒரே பாணியில் மீண்டும்.. நாட்டை உலுக்கிய தலைநகரில் நடந்த 2 கொடூரங்கள்: பெண்ணை தொடர்ந்து பலியான SWIGGY BOY!
கடந்த 1-ம் தேதி நாடு முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது டெல்லியில் உள்ள கஞ்சவாலா என்ற பகுதியில் அஞ்சலி என்ற 20 வயது இளம்பெண் ஒருவர் சாலையில் நிர்வாண கோலத்தில் சேரும் சகதியுமாய் கொடூரமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து நள்ளிரவு நேரத்தில் காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த பெண் வந்த ஸ்கூட்டியும், ஓவர் காரும் மோதியதில், இந்த பெண் காருக்கடியில் சிக்கியுள்ளார்.
இதனை அறியாத காரினுள் இருந்த நபர்கள் தொடர்ந்து காரை இயக்கியுள்ளனர். இதில் சுமார் 12- 14 கி.மீ வரை அந்த பெண் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து சுமார் 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக காரில் வந்த 5 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து தலைநகரில் அரங்கேறிய இந்த கோர சம்பவம் குறித்து இந்திய அளவில் போதாகாரமான நிலையில், அந்த பெண் தனியாக வரவில்லை, அவருடன் தோழி நிதி என்பவரும் வந்துள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர் இதுகுறித்து கூறுகையில், "விபத்து நடப்பதற்கு முன்பு அஞ்சலி குடித்திருந்தாள். இருப்பினும் அவள் இருசக்கர வாகனம் ஓட்டினார். பின்னர் நாங்கள் போய்க்கொண்டிருக்கையில் ஒரு கார் எங்கள் ஸ்கூட்டி மீது மோதியது.
அப்போது அஞ்சலி அதில் சிக்கியிருந்தார். நான் இதை கண்டதும் அந்த இடத்தில் இருந்து ஓடிவிட்டேன். மேலும் யாரிடமும் இதுகுறித்து தெரிவிக்கவில்லை. ஏனென்றால் நான் பயந்துவிட்டேன். அதோடு என் தோழி காரில் சிக்கியிருந்தது கார் ஓட்டி சென்றவர்களுக்கு நன்கு தெரியும்" என்றார்.
இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து பலரும் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க கூடாது என்று கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், தற்போது இதே தலைநகரில், இதே பாணியில், இதே நாளில் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது உத்தர பிரதேச மாநிலம் மைன்புர சேர்ந்த கவுஷல் யாதவ் என்ற இளைஞர் ஒருவர், டெல்லி - உ.பி இடையே இருக்கும் நொய்டாவில் ஸ்விக்கி டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் புத்தாண்டு தினத்தன்றும் அதிகாலை சுமார் 1 மணியளவில் டெலிவரி செய்துவிட்டு வந்துகொண்டிருந்தார்.
அப்போது நொய்டாவில் உள்ள செக்டார் 14 மேம்பாலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரது பைக் மீது அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதியுள்ளது. இதில் அவர் காரில் சிக்கியுள்ளார். இதனை அறியாத கார் ஓட்டுனரோ சுமார் 500 மீட்டர் வரை காரை ஓட்டி சென்றுள்ளார். பின்னர் எதோ சிக்கியிருந்ததை அறிந்த அவர், காரை நிறுத்தி என்னவென்று பார்க்கையில், அதில் ஒரு இளைஞர் சிக்கியிருந்தது தெரியவந்தது.
இதைடுயத்து பதறிப்போன ஓட்டுநர் அவரது உடலை அங்கேயே விட்டுவிட்டு தனது காரை எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து எதேர்ச்சியாக டெலிவரி பாயின் குடும்பத்தார் அவருக்கு கால் செய்ய, அதனை அந்த பக்திக்கு வந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர் எடுத்து பேசி, இதுகுறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பித்த காரின் ஓட்டுனரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புத்தாண்டின்போதே, ஒரே பாணியில் இரண்டு கொலை சம்பவங்கள் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இளம்பெண் வழக்கில் அவரது உடற்கூறாய்வு முடிவுகள் படி, அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், அவரது உடல் முழுவதும் சிராய்ப்புகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் அவரது மண்டை ஓடு சிதறி, மூளையிலுள்ள சில பாகங்கள் இல்லை என்றும், அவரது நெஞ்சு எழும்பு வரி உடல் தேய்ந்திருந்ததும் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!