India
“ராகுல் காந்தி பாதுகாப்பில் ஒன்றிய அரசு பெரும் குளறுபடி; காஷ்மீர் பயணம் தொடரும்”: எச்சரிக்கும் காங்கிரஸ்!
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா என டெல்லி நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது ராகுல் காந்தி பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இந்நிலையில், ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடி நடந்ததாக கூறி காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சிவேணுகோபால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடித்ததில், கடந்த 24ம் தேதி ராகுல் நடைபயணம் டெல்லிக்குள் நுழைந்த போது பலமுறை பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுபடுத்தும் பணியில் டெல்லி காவல்துறை தோல்வி அடைந்தது என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தனது கடித்ததில், z+ பாதுகாப்பு உள்ள ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்களே அரண் அமைத்து பாதுகாப்பு வழங்கியதாகவும், பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற பிரபலங்களிடம் புலானய்வு பிரிவு விசாரனை நடத்தியதும், ஹரியான மாநிலத்தில் பாரத் ஜோடா யாத்திரைக்கு பயன்படுத்தபட்டு வரும் கண்டெய்னர்களில் மாநில உளவு பிரிவு அத்துமீறி நுழைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமல்லாது தற்போது காஷ்மீரில் நடைபயணத்தை தொடங்கி உள்ளதால் ராகுல் காந்திக்கு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தியாவில் சுதந்திரமாக நடமாட உரிமை உண்டு என்றும் மத்திய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடாமல் காங்கிரஸ் தலைவர்களின் பாதுகப்பை உறுதி செய்யுமாறு கேட்டுகொண்டுள்ளார்.
முன்னதாக டெல்லி செங்கோட்டையில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி," நாட்டின் சாமானிய மக்கள் தற்போது அன்பை பற்றி பேசத் தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான மக்கள் நடைபயணத்தில் கலந்து கொண்டனர். பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் வெறுப்புணர்வைப் பரப்புகிறார்கள். நாங்கள் அன்பை பரப்புகிறோம். இந்த நடைபயணத்தில் அன்பு நிறைந்து இருக்கிறது..
ஜாதி, மதம், பணக்காரன், ஏழை என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறது. ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.கவின் அனைத்து கொள்கைகளும் அச்சத்தை விதைப்பதுதான். அனைவரும் அச்சத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இந்த அச்ச உணர்வை வெறுப்பாக மாற்றுகிறார்கள்.” எனத் தெரிவித்திருந்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!