India

‘பந்த்’ போராட்டத்திற்கு ஆதரவு தராததால் ஆத்திரம்.. பேருந்துகள், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து அதிமுக அராஜகம்!

புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க, ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதனிடையே ஆளும் அரசில் கூட்டணியில் இருந்து கொண்டே, ஒன்றிய பா.ஜ.க அரசிடம் மாநில அந்தஸ்து கேட்டு பெறாமல், தங்களுடைய சுய நலனுக்காக இன்று பந்த் போராட்டத்தை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அ.தி.மு.க அழைப்பு விடுத்திருந்த பந்த் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு கொடுக்காமல் வழக்கம்போல் தங்களது பணிகளை மேற்கொண்டனர். அதேபோல் நேரு வீதி, பெரி மார்க்கெட் உள்ளிட்ட நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் செயல்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க-வினர் தமிழ்நாடு பேருந்து உள்ளிட்ட 5 பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அதேபோல் சாலையில் சென்ற ஆட்டோக்களை நிறுத்தி கண்ணாடிகளை உடைத்தனர்.

இதனிடையே பேருந்து மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்த அ.தி.மு.கவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மாநில ஐ.ஜி சந்திரன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காலை முதல் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டு வந்த 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Also Read: ரூ.33 லட்சம் மோசடி.. அதிமுக முன்னாள் MLA மற்றும் மனைவி - மகள் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸ் விசாரணை!