India

கார் பிரியர்களுக்கு அதிர்ச்சி.. ‘அடுத்தாண்டு முதல் இந்த கார்கள் விற்பனைக்கு வராது..’ - வெளிவந்த பட்டியல்!

இந்தியாவில் கடந்த ஆண்டுகளை விட அதிகமான இயற்கை பேரிடர்களை நாடு சந்தித்து வருகிறது. குறிப்பாகப் பல மாநிலங்கள் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தைச் சந்தித்து வருகின்றன.இப்படி இந்தியாவைப் போன்ற உலக நாடுகளும் கனமழை, வெள்ளம், காட்டுத்தீ என இயற்கை பேரிடர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக பருவநிலை மாற்றம் இருந்து வருகிறது.

இந்த பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக வாகனங்கள் வெளியிடும் புகை காரணமாக இருந்துவருகிறது. இதன் காரணமாக தற்போது வரும் வாகனங்களில் வெளியிடப்படும் புகை அளவை குறைக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2020ம் ஆண்டு முதல் நேரடியாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் மாறவேண்டும் என இந்திய அரசு அறிவித்தது. இதற்காக RDE (Real Driving Emissions norms) எனப்படும் புதிய மாசு உமிழ்வு விதிமுறை கொண்டுவரப்பட்டது.

இதனால் RDE விதிமுறைகளுக்கு ஏற்ப, கார் தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனங்களை மேம்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. BS4-லிருந்து BS6 விதிமுறைகளுக்கு மாறும்போது இந்திய வாகனத் துறை பெரும் சவாலை எதிர்கொண்டது. கடுமையான உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யாததால், பல டீசல் இன்ஜின்கள் குறைக்கப்பட வேண்டியிருந்தது.

இந்த விதிமுறை வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் செலவுகளை ஏற்படுத்தியதால் சில நிறுவனங்கள் சில கார்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளன. அந்த வகையில் இந்திய சந்தையில் இருந்து விடைபெறும் 8 கார்களைப் பற்றி பார்க்கலாம்.

Honda - Jazz

Honda - WR - V

Honda - Amaze Diesel

Honda - 4th Gen City

Honda - 5th Gen City Diesel

Mahindra - Alturas G4

Mahindra - Marazzo

Mahindra - KUV100

Hyundai - i20 diesel

Hyundai - Verna diesel

Tata - Altroz diesel

Skoda - Octavia

Skoda - superb

Renault - Kwid 800

Nissan - Kicks

Maruti Suzuki - Alto 800

Toyota - Innova Crysta petrol

உள்ளிட்ட கார்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சந்தையில் மீண்டும் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் Honda நிறுவனம்தான் அதிக (5) மாடல் கார்களை நிறுத்தவுள்ளது. Honda - Jazz மாடல் வெளிநாடுகளில் விற்கப்பட்டாலும் கூட, அது இந்தியாவிற்கு கிடைக்காது.

எனினும் Honda நிறுவனம் அடுத்த ஆண்டு தங்கள் புது மாடல் கார்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி Honda City 2023 - அடுத்த ஆண்டு மே மாதமும், Honda WR-V 2023 அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் வெளியிடவாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: SC/ST பிரிவினரை விட EWSக்கு குறைந்த கட்-ஆப் மதிப்பெண்: வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.கவின் உண்மை முகம்!