India
"24 மணி நேரமும் இந்து - முஸ்லிம் பெயரில் வெறுப்பை பரப்பும் பா.ஜ.க": ராகுல் காந்தி கடும் தாக்கு!
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,அரியானா மாநிலத்தை அடுத்து நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி," நாட்டின் சாமானிய மக்கள் தற்போது அன்பை பற்றி பேசத் தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான மக்கள் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் வெறுப்புணர்வைப் பரப்புகிறார்கள். நாங்கள் அன்பை பரப்புகிறோம். இந்த நடைபயணத்தில் அன்பு நிறைந்து இருக்கிறது.. ஜாதி, மதம், பணக்காரன், ஏழை என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறது.
ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.கவின் அனைத்து கொள்கைகளும் அச்சத்தை விதைப்பதுதான். அனைவரும் அச்சத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இந்த அச்ச உணர்வை வெறுப்பாக மாற்றுகிறார்கள்.
ஆனால், நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம். நாங்கள் அன்பை பரப்புகிறோம். அனைத்து இந்தியர்களையும் அரவணைத்துச் செல்கிறோம். அன்பின் மூலம் மக்களை ஒன்றிணைக்கும் இந்தியாவிற்கு வித்தியாசமான வழியைக் காண்பிப்பதே நடைபயணத்தின் நோக்கம்.
இந்தியாவை உடைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக 24 மணி நேரமும் தொலைக் காட்சிகளில் இந்து - முஸ்லிம் என்ற பெயரில் வெறுப்பு பரப்பப்படுகிறது.
மதவெறியை ஒரு ஆயுதமாக பா.ஜ.க பயன்படுத்துகிறது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சக்திகளின் உத்தரவின் பேரில் எப்போதும் தொலைக்காட்சியில் தனது இமேஜை அழிக்க பிரதமர் மோடியும், ஆளும் பா.ஜ.கவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். ஆனால் ஒரு மாதத்தில் உண்மையை நாட்டுக்கு நான் காட்டியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!