India
கடனை திரும்ப கொடுக்காத ஆட்டோ ஓட்டுநர்.. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனைவி.. குஜராத்தில் அதிர்ச்சி !
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சாவ்தா என்ற நபரிடம் 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், சொன்ன தேதியில் ஆட்டோ ஓட்டுனரால் தான் வாங்கிய கடனை திரும்பதர முடியவில்லை. எனினும் விரைவில் கடனை திரும்ப தருவதாக கூறிஉள்ளார்.
ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத சாவ்தா ஆட்டோ ஓட்டுனரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்துவைத்து பணத்தை கொடுக்குமாறும் அல்லது இந்த விடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சியடைந்த நிலையில், அவரால் பணத்தை திரும்ப கொடுக்கமுடியாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக சாவ்தா அடிக்கடி வீட்டுக்கு வந்த ஆட்டோ ஓட்டுனரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார்.
ஒரு கட்டத்துக்கு மேல் இதை பொறுக்கமுடியாத ஆட்டோ ஓட்டுனர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர்கள் இந்த புகாரை விசாரிக்க மறுத்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி அவர் நீதிமன்றத்தின் முறையிட்ட நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதற்குள் சாவ்தா என்பவர் தலைமறைவாகிய நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், திடீரென ஆட்டோ ஓட்டுனரின் மனைவியை கடத்திச்சென்ற சாவ்தா கட்டாயப்படுத்தி அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். மேலும், ஆட்டோ ஓட்டுனரையும் அவரின் ஆட்கள் தாக்கியுள்ளனர்.
மேலும், கணவர் தாக்கப்பட்டதை தடுக்கமுயன்ற அவரின் மனைவியின் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த விவகாரம் பெரியதாகியதைத் தொடர்ந்து போலிஸார் தலைமறைவாக இருந்த சாவ்தாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!