India
புதிய விதிமுறை காரணமாக அடுத்தாண்டு முதல் இந்த கார்கள் விற்பனைக்கு வராது - வெளிவந்த பட்டியல் !
இந்தியாவில் கடந்த ஆண்டுகளை விட அதிகமான இயற்கை பேரிடர்களை நாடு சந்தித்து வருகிறது. குறிப்பாகப் பல மாநிலங்கள் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தைச் சந்தித்து வருகின்றன.இப்படி இந்தியாவைப் போன்ற உலக நாடுகளும் கனமழை, வெள்ளம், காட்டுத்தீ என இயற்கை பேரிடர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக பருவநிலை மாற்றம் இருந்து வருகிறது.
இந்த பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக வாகனங்கள் வெளியிடும் புகை காரணமாக இருந்துவருகிறது. இதன் காரணமாக தற்போது வரும் வாகனங்களில் வெளியிடப்படும் புகை அளவை குறைக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த 2020ம் ஆண்டு முதல் நேரடியாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் மாறவேண்டும் என இந்திய அரசு அறிவித்தது. இதற்காக RDE (Real Driving Emissions norms) எனப்படும் புதிய மாசு உமிழ்வு விதிமுறை கொண்டுவரப்பட்டது.
இதனால் RDE விதிமுறைகளுக்கு ஏற்ப, கார் தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனங்களை மேம்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த விதிமுறை வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் செலவுகளை ஏற்படுத்தியதால் சில நிறுவனங்கள் சில கார்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளன.
அதன்படி ஏப்ரல் 2023 முதல் வாங்குவதற்கு இனி கிடைக்காத அனைத்து கார்கள் குறித்த பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.
Hyundai -i20 diesel
Hyundai -Verna diesel
Tata -Altroz diesel
Mahindra -Marazzo
Mahindra -Alturas G4
Mahindra -KUV100
Skoda -Octavia
Skoda -superb
Renault -Kwid 800
Nissan-Kicks
Maruti Suzuki -Alto 800
Toyota -Innova Crysta petrol
Honda -City 4th gen
Honda -City 5th gen diesel
Honda -Amaze diesel
Honda -Jazz - போன்ற கார்கள் அதன்பின்னர் சந்தையில் மீண்டும் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!