India
முதல்வர் ரங்கசாமியின் முதுகில் குத்தி வரும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.. நாராயணசாமி கடும் விமர்சனம்!
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க பல்வேறு வகைகளில் முதல்வர் ரங்கசாமிக்கு தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக ஒன்றிய பா.ஜ.க அரசு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மூலம் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை சுதந்திரமாகச் செயல்படவிடாமல் தடுத்து வருவதாக தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மைக் காலமாக முதல்வர் ரங்கசாமியும் தொடர்ந்து ஒன்றிய அரசு மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு ரங்கசாமி ஓடிவிடலாம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற விவகாரத்தில் வளர்ச்சித்திட்டங்களுக்காக அனுப்பப்படும் கோப்புகளை ஒன்றிய அரசு திருப்பி அனுப்புவதாக ரங்கசாமி ஆதங்கப்படுகிறார்.
ஆனால் இது குறித்து டில்லிக்குச் சென்று ஒன்றிய அரசை ரங்கசாமி வலியுறுத்தவில்லை. ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு முறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். அப்போது எதிர் கட்சித்தலைவராக இருந்த ரங்கசாமி எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை.
மாநில அந்தஸ்த்து கேட்டு பிரதமரைச் சந்திக்க டில்லிக்குச் சென்றபோது ரங்கசாமி உட்பட என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க புறக்கணித்தது. மேலும் காங்கிரஸ் ஆட்சிக்குத் கிரண்பேடி தொல்லை கொடுத்தபோது வேடிக்கை பார்த்தவர்த்து காண்டிருந்தவர்தான் இந்த ரங்கசாமி.
மாநில அந்தஸ்த்து பெறுவதற்குத்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். ஆனால் தற்போது முடியவில்லை என ரங்கசாமி புலம்புகிறார். ஒன்றிய அரசுக்கு ரங்கசாமி என்ன அழுத்தம் கொடுத்தார்? அனைத்து கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தினாரா?. இப்போது அவர் புலம்ப காரணம் என்ன? ஒன்றிய அரசை எதிர்த்து தெருவில் இறங்கிப் போராடுவாரா?. அண்ணன் என கூறி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை முதுகில் குத்தி வருகிறார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்' என தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !