India
நாட்டை உலுக்கிய சம்பவம் : சிறுமியை மாடியில் இருந்து தூக்கி வீசிய அரசுப்பள்ளி ஆசிரியை.. தலைநகரில் கொடூரம்!
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது நிகாம் பாலிகா வித்யாலயா பள்ளி. அரசுப்பள்ளியாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் பல்வேறு மாணவ - மாணவிகளும் படித்து வருகின்றனர். அதே போல் இப்பள்ளியில் கீதா தேஸ்வல் என்ற ஆசிரியையும் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஆசிரியை கீதா, பள்ளியின் முதல் மாடியில் இருக்கும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று ஆத்திரடைந்த கீதா வந்தனா என்ற சிறுமியை தாக்கியுள்ளார். மேலும் அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து சிறுமி மீது கீறல் போட்டுள்ளார்.
அதோடு ஆத்திரம் உச்சத்திற்கு போனதால், சிறுமியை மாடியிலுள்ள ஜன்னல் வழியாக தூக்கி போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சிறுமி மாடியில் இருந்து கீழே விழுவதை கண்ட அக்கம்பக்கத்தினர், கடும் காயத்தோடு இருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஆசிரியை சிறுமியை தாக்க முயன்ற போது, அருகிலிருந்த சக ஆசிரியை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள்ளும் கீதா, சிறுமியை மாடியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்து பதறியடித்து வந்த சிறுமியின் பெற்றோர் அத்தரி அழுதுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறுகையில், "எனது மகளை ஆசிரியை முதல் மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். என் மகள் என்ன செய்தாலும் இப்படியா ஒரு டீச்சர் செய்வது? மருத்துவமனையில் அவருக்கு அனைத்து வகையான சிகிச்சையும் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனது மகளின் நிலைமைக்கு காரணாமாக இருந்த ஆசிரியரை உடனடியாக கைது செய்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும். ஏன் ஆசிரியர் இப்படி செய்தார் என்று இன்னமும் தெரியவில்லை" என்று கதறி அழுதுகொண்டே கூறினார்.
தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் ஆசிரியை கீதா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் 5-ம் வகுப்பு சிறுமியை கத்தரிக்கோலால் தாக்கி, மாடியிலிருக்கும் ஜன்னல் வழியே தூக்கி வீசிய அரசுப்பள்ளி ஆசிரியரின் செயல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!