India
சாலையை கடந்த போது லாரி மோதி உயிரிழந்த யானை.. வனத்துறை விசாரணை: தொடரும் சோகம்!
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைக்கும் எல்லைப்பகுதியாகும். அதேபோல் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலிருந்து முத்தங்கா புலிகள் காப்பக வனப்பகுதி வழியாகக் கர்நாடக மாநிலம் குண்டல்பட்டு வரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்நிலையில் கேரளா - கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள யானை குளம் என்ற இடத்தில் சாலையில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது யானையின் உடலில் பலத்த காயம் இறந்து தெரியவந்தது. மேலும் யானை சாலையை கடக்கும் போது லாரி ஒன்று மோதியதில் உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் , யானை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை இறந்ததை அடுத்து தற்காலிகமாக அந்த சாலை வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் செல்லும்போது இப்படி அடிக்கடி வாகனங்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. இதை தடுக்க ஒன்றிய அரசிடம் போதுமான திட்டங்கள் இல்லாததாலே இந்த சம்பவங்கள் என வன விலங்குகள் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!