India
டேய் வெள்ளை துணிய எடு: G20 மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகளிடம் இருந்து குடிசைகளை மறைக்கும் அதிகாரிகள்!
ஜி20 மாநாட்டை முதல்முறையாக இந்தியா நடத்துவதற்கு தலைமையேற்றுள்ளது. இந்த மாநாடு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9,10 ஆகிய தேதிகளில் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதைமுன்னிட்டு அண்மையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, "இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்றவேண்டியுள்ளது. ஜி20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மும்பையில் இன்று முதல் டிச.16 வரை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கான செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜி20 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்.
இவர்களை வரவேற்பதற்காக மும்பை நகரம் முழுவதும் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையின் அழகை மட்டுமே காட்டும் வகையில், குடிசை பகுதிகள், அழுக்கடைந்த ஆறுகளை மறைக்கும் விதமான பேனர்கள் மற்றும் துணிகளை வைத்து நகராட்சி நிர்வாகம் முடி மறைத்துள்ளது.
இது குறித்து கூறும் மாஹிம் தரைப்பாலத்தில் வசித்து வரும் முகமது ரப்பன்," மூன்று நாட்களாக அதிகாரிகள் வந்து எங்கள் பகுதிகள் தெரியாத படி தடுப்புகளை அமைத்து செடிகளை வைத்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வரும் பெரிய நபர்களுக்கு எங்கள் சேரிகளைக் காட்ட இவர்கள் விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார். இப்படி மும்பை நகரம் முழுவதும் குடிசை பகுதிகளைத் துணிகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி செய்வது ஒன்றும் முதல்முறையல்ல. ஏற்கனவே 2020ம் ஆண்டு அஹமதாபாத்திற்கு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தந்த போது குடிசை பகுதிகள் துணிகளை வைத்து மறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!