India
குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.. பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி: யார் யார் எத்தனை இடங்களில் முன்னிலை?
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக டிச 1ம் தேதியும், டிச 5ம் தேதியும் நடைபெற்றது. அதேபோல் 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நவ.12ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் 2 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க 155 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 18, ஆம் ஆத்மி 6, மற்றவை 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க 92 தொகுதிகள் தேவையான நிலையில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க 155 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
கடந்த தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது 18 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி களம் காண்கிறது. இதனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று தனது காலை குஜராத்தில் பதித்துள்ளது.
மேலும் ஆம் ஆத்மி போட்டி போட்டதால் வாக்குகள் பறிந்துள்ளது. இது பா.ஜ.கவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜ.க 155 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அதேபோல், 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி34 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியைப் பிடிக்க 33 இடங்கள் தேவையான நிலையில் காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இருப்பினும் பா.ஜ.க 29 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. குஜராத் தேர்தலில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கூறியிருந்தது என்பது குறிப்பிடக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!