India

திணறும் இந்திய பொருளாதாரம் : 5வது முறையாக ரெப்போ வட்டியை உயர்த்தியது RBI.. தனி நபர் கடன் உயர வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கை கூட்டத்தை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தும். அந்த கூட்டத்தில் வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை குறித்த முடிவுகளை வெளியிடப்படும். மேலும் அந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால குறைந்தபட்ச வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) போன்றவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து முடிவும் எடுக்கப்படும்.

அதன் படி அந்த கூட்டம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. சர்வதேச பொருளாதார நிலைமை, வட்டி விகிதங்கள், பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவின் தாக்கம் போன்றவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கூட்டம் முடிந்து நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டள்ளது.

மேலும் பணவீக்கம் காரணமாக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) ஒரே ஆண்டில் 5 வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பணவீக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக ரெப்போ ரேட் விகிதம் 0.35 சதவீதம் அதிகரித்து 6.25 ஆக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திதாஸ் காந்தி கூறுகையில், கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நாட்டின் மொத்த சில்லறை பணவீக்கம் 6.5% இருந்து 6.6% உயர்ந்துள்ளது. அதேபோல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 4.4% குறையும், ஜனவரி முதல் மார்ச் வரை 4.2 சதவீதமும், 2022 - 2023 நிதியாண்டில் 7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக குறையும் எனக் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் வங்கிக்கடன் பெரும் பொதுமக்கள் தாங்கள் வாங்கிய வீடு,வாகனம், தனிநபர் கடனுக்கு கூடுதல் வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். அதாவது வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் அந்த வங்கிகள் கூடுதல் வட்டியை கட்டவேண்டியிருக்கும்.

இதனால் வங்கிகள் அந்த கடன்சுமையை மக்கள் மேல் திணிக்கும். இதனால் ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மேலும் அவதிப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்தியப் பொருளாதாரத்தை மோசமாக வைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டிற்கு யோசனை சொல்ல என்ன தகுதி இருக்கு?: முரசொலி