India
Slow Poison கொடுத்து கொலை செய்யப்பட்ட கணவன்.. காதலருடன் சேர்ந்து திட்டம் தீட்டிய மனைவி சிக்கியது எப்படி?
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த கமல்காந்த் ஷா (44). தொழிலதிபரான இவருக்கும் கவிதா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணமானது. திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்குள் வழக்கமான தம்பதிகள் போல் சிறுசிறு சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சமீப காலமாக கமல்காந்திற்கு உடல்நிலை மோசமாக காணப்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அது பலனின்றி 17 நாளில் உயிரிழந்தார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இவரது உடலை உடற்கூறாய்வு செய்தனர். அப்போது கமல்காந்தின் இரத்தத்தில் ஆர்சனிக் மற்றும் தாலியம் போன்ற தாதுக்கள் அளவுக்கு அதிகமாக இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற தாதுக்கள் இரத்தத்தில் போதுமான அளவு காணப்பட்டு வருகிறது. ஆனால் இது அளவுக்கு அதிகமானால் விஷத்தன்மையை உருவாக்கி உயிரை கொள்ளும்.
இதையடுத்து இதனால் தான் அவர் உயிரிழந்தார் என்பதை அறிந்த போலீஸ், இது குறித்து கமல்காந்தின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது மனைவியின் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தது. மேலும் கமல்காந்தின் டயட் உணவு முறையையும் கேட்டறிந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கிடுக்கிப்பிடி விசாரணையில் கமல்காந்தின் மனைவி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதாவது ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த கமல்காந்த் - கவிதா வாழ்க்கையில் அண்மை காலமாக சண்டை, சச்சரவுகள் இருந்து வந்துள்ளது. அதோடு கவிதாவுக்கு ஹிதேஷ் என்ற ஆண் நண்பர் ஒருவரும் உள்ளார்.
இதனால் தனது கணவனை கொலை செய்ய எண்ணிய அவர், தனது ஆண் நண்பருடன் மாட்டிக்கொள்ளாமல் இருக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த தாதுக்கள் கலந்த மருந்தை அவரது உணவு, மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடுத்துள்ளார். இப்படி தனது கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை கவிதா வாக்குமூலமாக அளித்த பிறகு, அவரது ஆண் நண்பர் ஹிதேஷையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கமல்காந்தின் தாயாரும் இதே முறையில் இறந்ததால், அதுவும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்த மனைவியின் செயல் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!