India
ஏய் இங்க கட வைப்பியா.. தண்டவாளத்தில் காய்கறிகளை வீசிய போலிஸ்: எடுக்க சென்ற வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்!
உத்தர பிரதேச மாநிலம், கான்பிரில் கல்யான்பூர் என்ற பகுதியில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு அதிகமாக மக்கள் வந்து செல்வதால் இங்குச் சாலையோரங்களில் காய்கறிகள் விற்பனை உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாலையை ஆக்கரிமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலிஸாருக்கு புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதிக்குச் சென்று சாலையோரத்தில் இருந்த கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இர்பான் என்பவரது கடைக்கு வந்த போலிஸார் திடீரென அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மற்றும் எடை கற்களை அருகே இருந்த தண்டவாளத்தில் வீசியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற இர்பானையும் போலிஸார் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து இர்பான் போலிஸார் வீசிய காய்கறிகளை எடுக்கச் சென்றபோது தண்டவாளத்தில் வந்த ரயில் அவர்மீது மோதியுள்ளது. இதில் இர்பானின் இரண்டு கால்களும் துண்டாகியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக வியாபாரிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருந்த போலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி இர்பானின் தந்தை கூறுகையில், 'எனது மகனுக்கு 20 வயதுதான் ஆகிறது. இப்போது 2 கால்களையும் இழந்து துடிக்கிறான்" என கூறி கதறி அழுதுள்ளார்.
"சாலையோரம் கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் உள்ளூர் போலிஸார் தினமும் ரூ.50 வரை லஞ்சம் வாங்கி செல்கின்றனர். ஆனாலும் அடிக்கடி இப்படி வந்து விரட்டி அடிக்கின்றனர்" என வேதனையுடன் வியாபாரிகள் கூறுகின்றனர்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!