India
கேரளாவை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஆசிரியருக்கு 62 ஆண்டு சிறை தண்டனை !
மதரஸாவில் பயிலும் 6 வயது சிறுமி ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 62 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பட்டாம்பி என்ற பகுதி உள்ளது. இங்கு இருக்கும் மதரஸா என்று சொல்லப்படும் இஸ்லாமிய மத போதனைகளை கற்றுத் தரும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு சிறுமிகள் பயிலும் இங்கு கடந்த 2019-ம் ஆண்டு 30 வயதான அப்துல் ஹக்கீம் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அதே ஆண்டு இங்கு பயிலும் 6 வயது சிறுமி ஒருவரை யாருமில்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு சிறுமி வீட்டிற்கு அழுதுகொண்டே சென்ற போது, அவரிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது தனக்கு நேர்ந்ததை தனது பாஷையில் சிறுமி கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனே இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் ஹக்கீமை கைது செய்து விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இந்த வழக்கு விசாரணையில் காவல்துறையினர் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்தனர். தொடன்கிர்த்து இந்த நடைபெற்று வந்ததில், தற்போது குற்றவாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு கேரள நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
அதன்படி 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி அப்துல் ஹக்கீமிற்கு 62 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 3 லட்ச ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டும் என்றும் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!