India
குடிபோதையில் ஹோட்டலையே அடித்து நொறுக்கிய பா.ஜ.க தலைவர் மகன்.. வழக்குப் பதிவு செய்யாத பெங்களூரு போலிஸ்!
பெங்களூரு நகர பா.ஜ.க தலைவராக இருப்பவர் ராமச்சந்திரப்பா. இவர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் தனுஷ். இந்நிலையில், நவம்பர் 20 ஆம் நண்பர்களுடன் சேர்ந்து தனுஷ் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். மேலும் நண்பர்களுடன் குடித்து விட்டு நள்ளிரவில் உணவகம் ஒன்றிற்குச் சென்று உணவு கேட்டுள்ளார்.
அப்போது அங்கு இருந்த ஊழியர்கள் நேரம் முடிந்துவிட்டது. உணவு இல்லை என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் மற்றும் அவரது நண்பர்கள் உணவகத்திற்குள் புகுந்து ஊழியர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் கடையிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதையடுத்து வீடியோ ஆதாரங்களுடன் கடையின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகியும் தனுஷ் மற்றும் அவரது நண்பர்களை போலிஸார் கைது செய்யாமல் உள்ளனர்.
இந்நிலையில் பா.ஜ.கவின் மகன் என்பதால் போலிஸார் கைது செய்யாமல் இருக்கிறார்களா? என பாதிக்கப்பட்டவர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து வன்முறையில் ஈடுபட்ட பா.ஜ.க தலைவர் மகனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!