India
வாய் பேச முடியாத தாயின் ஏக்கம்.. சிறுவனின் கனவை நிறைவேற்றிய இளைஞர்.. நவீன கர்ணனுக்கு குவியும் பாராட்டு!
23 வயதான ஹர்ஷா சாய் என்பவர் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்தவர். கல்லூரி முடித்த பின்னர் தனியே YOUTUBE -இல் சேனல் தொடங்கி உடற்பயிற்சி வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்தார். இதன் காரணமாக அவரின் வீடியோகளுக்கு SUBSCRIBERS வரத்தொடங்கினர்.
அதன் பின்னர் 4 லட்ச ரூபாய் காரை 5 முழுக்க முழுக்க 5 ரூபாய் நாணயம் கொடுத்து வாங்கி அதை தனது சேனலில் வெளியிட்டார். இந்த சம்பவத்தில் பெரும் புகழ் பெற்ற அவருக்கு மீடியா வெளிச்சமும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பேய் வீட்டில் தங்குவது போன்ற வீடியோக்களை அவர் வெளியிட அவரை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் சென்றது.
இதன் பின்னர் YOUTUBE மூலம் தான் சம்பாதிக்கும் காசினை மக்களுக்கு செலவிட நினைத்த அவர், சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்தார். அந்த வீடியோவும் இணையத்தில் பெரும் ஹிட் கொடுக்க அதன்பின்னர் பலருக்கு உதவ தொடங்கினார்.ஏழை குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டி கொடுப்பது, பல ஆயிரம் பேருக்கு டேங்க் புல் என்னும் அளவுக்கு பெட்ரோல் போட்டு கொடுப்பது என தற்போது ஒரு வள்ளல் என்ற அளவில் பேசப்படுகிறார்.
இந்த நிலையில் அவர் செய்துள்ள மற்றொரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சாலையில் செல்லும்போது சிறுவன் ஒருவன் ஒரு கடையின் முன் நின்று சைக்கிள் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அதனை ஹர்ஷா சாய் பார்த்து அந்த சிறுவனிடம் பேசியுள்ளார்.
அப்போது தன்னிடம் இறந்த சைக்கிள் உடைந்துவிட்டதால் புது சைக்கிளை வாங்கித்தர வீட்டில் வசதியில்லை என்று அந்த சிறுவன் கூறியுள்ளார். உடனடியாக சிறுவனை அழைத்து அந்த கடைக்கு சென்ற ஹர்ஷா சாய் சிறுவனுக்கு புதிய சைக்கிள் வாங்கி தந்ததோடு அந்த கடையில் சிறுவன் கேட்ட விளையாட்டு பொருள்களையும் வாங்கிக்கொடுத்துள்ளார்.
பின்னர் சிறுவனை அழைத்துக்கொண்டு அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதுதான் சிறுவனின் தாய்க்கு வாய் பேச முடியாது என்பது தெரியவந்துள்ளது. ஹர்ஷா சாயின் செயலை அறிந்த அந்த தாய் அவரை கையெடுத்து கும்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனுக்கு உதவியதாக பலரும் ஹர்ஷா சாயை பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?