India

முகம் முழுவதும் முடி வளரும் விநோத நோய்.. 'குரங்கு மனிதர்' என பிறர் கிண்டல் செய்வதாக இளைஞர் வேதனை !

மத்திய பிரதேச மாநிலம் ராட்லாம் மாவட்டத்திலுள்ள நண்ட்லெட்டா கிராமத்தை சேர்ந்தவர் லலித் படிதார். இவருக்கு பிறந்ததில் இருந்தே முகம் உள்ளிட்ட உடல் முழுவதும் குரங்குகள் போல ரோமங்கள் வளர்ந்துள்ளது. இதனால் இவர் அந்த கிராமத்தில் விசித்திரமானவராக திகழ்ந்துள்ளார்.

இவருக்கு 6 வயது இருக்கும்போது இவர் 'குரங்கு மனிதர்' என அக்கம் பக்கத்தாரால் அழைக்கப்பட்டு கொடுமைப்படுத்தபட்டுள்ளார். இதன் காரணமாக இவர் வீட்டில் இருந்து வெளியே வருவதையே நிறுத்தியுள்ளது.

இவருக்கு உள்ளூர் தொண்டு நிறுவனங்களில் உதவியோடு மருத்துவநிபுணர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இவர் werewolf syndrome என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு தலையில் வளர்வதுபோலவே உடல்முழுவதும் நீளமாக முடி வளர்ந்து வரும்.

இது குறித்து பேசியுள்ள மருத்துவ வல்லுநர்கள், இந்த நோயால் பாதிக்கப்படுபவரை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை என் கூறியுள்ளனர். மேலும், இந்த நோய் மரபணு குறைபாட்டால் ஏற்படுகிறது என்றும், இதுவரை 100-கும் குறைவானவர்களுக்கு தான் இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

அதேநேரம் தற்காலிக தடுப்பு முறைகளை பயன்படுத்து அதன் பாதிப்பை குறைக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பாக செய்தி ஆங்கில ஊடகத்தில் வெளியான நிலையில், பலரும் லலித் படிதாரின் நிலையை கண்டு அவருக்கு உதவ முனைவந்துள்ளனர்.

Also Read: கத்தார் உலகக்கோப்பையில் எழுச்சிபெறும் ஆசிய நாடுகள்.. வருங்கால வாய்ப்பை பயன்படுத்துமா இந்தியா ?