India
அக்குபஞ்சர் சிகிச்சை என்ற பெயரில் அந்தரங்க உறுப்புகளில் பாலியல் சீண்டல்.. போலி டாக்டர் சிக்கியது எப்படி?
கர்நாடக மாநிலம் பெங்களூரு மதிகெரெ பகுதியில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து வருபவர் வெங்கடநாராயணா. இவர் சிகிச்சை அளிப்பதாக்கூறி, சிச்சைக்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாத இளம் பெண் ஒருவர் குற்றஞ்சாடியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக யஷ்வந்த்பூர், பசவனகுடி மற்றும் சைபர் க்ரைம் காவல் நிலையத்திற்குச் சென்ற இளம் பெண் ஒருவர், வெங்கடநாராயணா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தன்னை போன்ற கிளிக் வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுள்ளார் எனப் புகார் அளித்தார்.
அவர் அளித்தப்புகாரின் போரில் யஷ்வந்த்பூர், பசவனகுடி மற்றும் சைபர் க்ரைம் போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த வெங்கடநாராயணாவை தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போது, கடந்த நவம்பர் 16ம் தேதியை வெங்கடநாராயணாவை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
போலிஸ் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவம் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக வெங்கடநாராயணா சொன்ன வாக்குமூலத்தில், வெங்கடநாராயணா வெறும் 12ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதாகவும், தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும் ஒரு பயிற்சி வகுப்பில் அக்குபஞ்சர் மருத்துவம் பற்றித்தெரிந்துக்கொண்டு, இரண்டு வருடம் பயிற்சி எடுத்துள்ளார். அதன்பின்னர் இவரது வீட்டில் அருகே அக்குபஞ்சர் மையத்தை தொடங்கி சிகிச்சை அளித்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சைக்கு வரும் இளம் பெண்கள் மற்றும் குடும்ப பெண்களிடம் ஆடையை கழற்றச்சொல்லி, தகாத முறையில் நடந்துள்ளார். மேலும் சிகிச்சை என்ற பெயரில் அந்தரங்க உறுப்புகளில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு செய்யும் செய்கையை தனது செல்போனை மறைத்து வைத்து வீடியோவாக எடுத்து அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!