India
வங்கியில் பணம் எடுப்பவரா நீங்கள்.. அப்ப இன்றே எடுத்துடுங்க: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!
நாடு முழுவதும் நவம்பர் 19ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய வெங்கடாச்சலம், "வங்கி கிளைகளில் எங்குக் கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை ஊழியர் பற்றாக்குறையாக இருக்கும் வங்கி கிளைகளுக்கு மாற்றினால் அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பார்கள்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை சில வங்கிகள் மீறி வருகிறது. ஒரு வங்கியில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது தொழிலாளர் சட்டத்தை மீறிய செயலாகும். மேலும் பொது மக்களிடம் வைப்புத்தொகை வசூலிக்கும் பணியிலிருந்த 240 ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கூட வழங்காமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சனைக்குத் தீர்பு காணும் நோக்கில் வேலை நிறுத்தம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையை அடுத்து இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் கடந்த 5ம் தேதி மும்பையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் எவ்விதமான முடிவும் எட்டப்படாததால் மீண்டும் டெல்லியில் 10ம் தேதி தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் வங்கிகள் நிர்வாகத்தின் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து மீண்டும் நேற்று வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் ஏற்கனவே திட்டமிட்ட படி வரும் நவம்பர் 19ம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்" என தெரிவித்துள்ளார். வங்கி ஊழியர்களின் போராட்ட அறிவிப்பால் அன்றைய தினம் வங்கி சேவையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!