India

தனியே விட்டுச்சென்ற கணவர்.. ஆட்டோ ஓட்டி மகனை படிக்கவைக்கும் ரியல் சிங்கப்பெண் !

மத்திய பிரதேச மாநிலம் சேர்ந்த ஜோதி வெர்மா (வயது 38). கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் இவரையும் தனது 11 வயது மகனையும் தனியே விட்டு பிரிந்துசென்றுள்ளார். இதனால் துயரத்தில் ஆழ்ந்த ஜோதி தனது மகனை நல்ல நிலைக்கு கொண்டுவரவேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

இதற்காக முதலில் சிறிய கடை அமைத்து அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் அதில் சில பிரச்சனைகள் எழுந்த நிலையில், அருகில் உள்ள வீடுகளுக்கு வேளைக்கு சென்று அதன்மூலம் தனது மகனை தொடர்ந்து படிக்கவைத்துள்ளார்.

ஆனால், தாய் வீட்டு வேலை செய்வதை வைத்து சிலர் அவர் மகனை அவதூறாகப் பேசிவந்த நிலையில், அந்த வேலையே துறந்த அவர் தன்னிடம் இருந்த நகைகளை விற்று ஒரு ஆட்டோவை வாங்கி அதனை வைத்து தற்போது குடும்பத்தை நடத்தியதோடு தனது மகனையும் தொடர்ந்து படிக்கவைத்து வருகிறார்.

இது தொடர்பாக ANI செய்தி நிறுவனத்துக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், "சக ஆட்டோ ஓட்டுநர்கள் கூட எனக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் என் மகன் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதற்காகவே அல்லும் பகலுமாக உழைத்து வருகிறேன்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த செயல் அந்த பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

Also Read: "இஷ்டம் இருந்தா வாங்க,, இல்லை ராஜினாமா செய்துட்டு போங்க" - TWITTER ஊழியர்களுக்கு எலான் மஸ்க் மிரட்டல் !